செங்கல்பட்டு, பிப்.5: லத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், கவனம் சார்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டம் (Focus Blocks Development Programme – FBDP) செயல்படுத்த லத்தூர் ஒன்றியத்தில் அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி புதிதாக உருவாக்கப்பட உள்ளதால் இப்பள்ளியினை செயல்படுத்த மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ன்படி பதிவுபெற்று அறிவுசார் குறையுடையோருக்கான சேவை புரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 10.2.2025, மாலை 5 மணிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் என்கிற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சிறப்பு பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.