- ஈரோடு கிழக்குத் தொகுதி
- சீமான்
- ஈரோடு
- நாதம் தமிழர்
- காட்ச்சி
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- ஈரோட் கிழக்கு
- தின மலர்
ஈரோடு: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 5 நபர்கள் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று மாலை இறுதி கட்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில் அனுமதி பெற்ற நேரத்தை விட கூடுதல் நேரத்தில் பரப்புரையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 5 நபர்கள் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை, சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து R.K.V சாலை சந்திப்பில், பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் 05:59 மணி வரை நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 5 நபர்கள் மீது 174 BNS பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24.ம் தேதி முதல் ஈரோட்டில் முகாமிட்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சீமான் மீது, தேர்தல் விதி மீறியதாக 6 வழக்குகளும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; சீமான் உள்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு! appeared first on Dinakaran.