×

சேவாக்போல் அபிஷேக் ஷர்மா: ஹர்பஜன் சிங் பாராட்டு

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து இருக்கிறார். இந்நிலையில் அபிஷேக் ஷர்மா குறித்து மாஜி வீரர் ஹர்பஜன்சிங் கூறுகையில், “இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் டாப் 3வது வீரராக அபிஷேக் ஷர்மா விளையாடும் காலத்தை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றேன். அப்படி இருந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக பலமாக மாறிவிடும். அந்த நாள் இன்னும் வெகு தூரத்தில் இல்லை.

சேவாக் போல் விளையாடக்கூடிய ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை. அந்த திறன் அபிஷேக் ஷர்மாவிடம் அதிகமாக உள்ளது. எனவே விரைவில் அவரை டெஸ்ட் அணியில் நாம் பார்க்கலாம். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அதிரடி காட்டுவார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அவர் தான் இருக்கிறார். அவருடைய நாளாக இருந்தால் எதிரணியிடமிருந்து போட்டியை எளிதாக கவர்ந்து சென்று விடுவார். டிராவிஸ் ஹெட்டும் இதை தான் செய்து வருகிறார். சேவாக், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இதை தான் செய்தார்கள். இதுபோன்ற வீரர்களால் தான் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் சுவாரஸ்யமாக மாறும்’’ என்றார்.

The post சேவாக்போல் அபிஷேக் ஷர்மா: ஹர்பஜன் சிங் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Abhishek Sharma ,Sehwag ,Harbhajan Singh ,Mumbai ,England ,Dinakaran ,
× RELATED அபிஷேக் சிக்சர் சாதனை