×

38வது தேசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல்

உத்தரகாண்ட்: டேராடூனில் நடைபெற்று வரும் 38வது தேசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகராஷ்டிராவைச் சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் +109 கிலோ எடை பிரிவில் தமிழகத்தின் எஸ்.ருத்ராமயன் 355 கிலோ (ஸ்நாட்ச் 175 + கினீன் அன்ட் ஜெர்க் 355) எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர், தேசிய சாதனையை படைத்தார்.

ஸ்குவாஷில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு தமிழக வீரரான அபய் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ராதிகா சீலன், பூஜா ஆர்த்தி ஆகியோர் வெண்லக் பதக்கம் கைப்பற்றினர்.

37 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் நேற்றைய நிலவரப்படி தமிழகம் 9 தங்கம், 12 வெற்றி, 13 வெண்கலம் என 34 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

The post 38வது தேசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : 38th National Sports Tournament squash men ,Uttarakhand ,Velavan Senthilkumar ,Tamil Nadu ,38th National Sports Tournament ,Dehradun ,Rahul ,Maharashtra ,38th National Sports Tournament Squash Men's Singles ,Dinakaran ,
× RELATED 38வது தேசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ்...