கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி

மிர்ச்சி சிவா நடித்த வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த காளி போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. மேலும், பேப்பர் ராக்கெட் என்ற ஒரு வெப் தொடரையும் அவர் இயக்கினார். இது ஜீ5 சேனலில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது மூன்றாவது படத்தை ஜெயம் ரவி- நித்யா மேனன் ஆகியோரை வைத்து கிருத்திகா உதயநிதி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே கிருத்திகா இயக்கிய வணக்கம் சென்னை படத்திற்கு இசையமைத்த அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: