தா.பேட்டை: திருச்சி மாவட்டம், தா.பேட்டை கடைவீதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதித்த நிலையில் ஒரு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தார். மேலும், தெருக்களில் படுத்து உறங்குவதுமாக இருந்துவந்த அந்த நபர் குறித்து தா.பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் என்பவர் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்கள் ஊழியர்களை தா.பேட்டைக்கு அனுப்பி வைத்தனர்.
தா.பேட்டை வந்த சமூகநல ஊழியர்கள் மனநலம் பாதித்து சுற்றி திரிந்த நபரை சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் உதவியுடன் தேடி கண்டு பிடித்தனர். பின்னர் அவருக்கு முடி திருத்தம் செய்து குளிக்க செய்து மாற்றுஉடை கொடுத்து வேனில் பாதுகாப்பாக அழைத்து சென்று திருச்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர். மனநலம் பாதித்து சுற்றித்திரிந்தவர், சமூக நலத்துறை உதவியுடன் காப்பகத்தில் சேர்த்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
The post தா.பேட்டையில் மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் சேர்ப்பு appeared first on Dinakaran.