அரவக்குறிச்சி: சுய உதவிக் குழுவில் கடன் வாங்கித் தர இடைத்தரகர்கள் கமிஷன் ட்பதால் இல்லத்தரசிகள் வேதனை. அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இருக்கக்கூடிய சுய உதவிக் குழுக்களில் இடைத்தரகர்கள் தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து மேலும் கடன் வாங்கித் தருவதாக அணுகுகின்றனர்.
தங்களுடைய குடும்ப கஷ்டத்தை எண்ணி கடன் பெற முயற்சிக்கும் போது இடைத்தரகர்கள் சுய உதவி குழுவில் உள்ள நபர்களிடம் கமிஷன் கேட்கின்றனர். கமிஷன் ஆனது 300 ரூபாய் தொடங்கி 3000 ரூபாய் வரை நீளுகிறது. மேலும் கடன் பெற்று தருவதோடு இடைத்தரகர்களின் வேலை முடிந்தது. அதன் பிறகு இடைத்தரகர்கள் சுய உதவி குழுக்களை கண்டு கொள்வதில்லை. அரவக்குறிச்சி பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இது போன்ற இடைத்தரகர்கள் பெருகி வருவதால் சுய உதவிக் குழுக்களில் உள்ள இல்லத்தரசிகள் தங்கள் கஷ்டத்திற்காக பணம் பெறும்போது கமிஷன் வாங்குவது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
The post மகளிர் சுய உதவி குழுவிடமிருந்து கமிஷன் பறிக்கும் இடைத்தரகர்கள் appeared first on Dinakaran.