ஓடிடியில் வெளியாகிறது மோகன்தாஸ்

சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மோகன்தாஸ் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். ராட்சசன் பட டைரக்டர் ராம்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன் அவர் நடித்த படம் மோகன்தாஸ். புதியவர் முரளி கார்த்திக் இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சீரியல் கில்லர் பற்றிய திரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷுடன் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் திரைக்கு வருவதில் தாமதமாகி வந்தது. படத்தின் டீசரும் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் படம் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் திரையிட திட்டமிட்டுள்ளனர். ஜியோ சினிமா, இப்படத்தை தனது ஓடிடி தளத்தில் வெளியிட முன்வந்துள்ளது. இதற்காக விஷ்ணு விஷாலின் மார்க்கெட் வேல்யூவுக்கு ஏற்ப தொகை பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் மேலும் சில ஓடிடி நிறுவனங்களுடனும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது விரைவில் தெரியவரும்.

The post ஓடிடியில் வெளியாகிறது மோகன்தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: