டெல்லி: டெல்லி கடமை பாதையில் தேசியக் கொடி ஏற்றி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்றுள்ளார். மேலும் குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.