×

கெங்கவல்லியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

கெங்கவல்லி, ஜன.26: கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகை ஏந்தி கெங்கவல்லி முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர்.

இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

The post கெங்கவல்லியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Voters' Day ,Kengavalli ,National Voters' Day ,Kengavalli taluka ,Tahsildar Balakrishnan ,Government Girls' Higher Secondary School ,
× RELATED அரியலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி