×

நாமக்கல்லில் கின்னஸ் சாதனை முயற்சி; ஒரு நிமிடத்தில் 132 முறை சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவன்: பொதுமக்கள் பாராட்டு

நாமக்கல், ஜன.26: நாமக்கல்லில், ஒரு நிமிடத்தில் 132 முறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்த சிறுவனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவசிவபாலன்(9). 5ம் வகுப்பு படிக்கும் இவன், சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறான். சிலம்பம் சுழற்சியில் கின்னஸ் சாதனை புரிய ஆர்வம் கொண்டார். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சிறுவனின் சாதனை நிகழ்ச்சி நாமக்கல்- துறையூர் ரோட்டில் உள்ள வீரராகவ பெருமாள் கோயில் திடலில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் தொடங்கி வைத்தார். நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, வேளாண் உதவி இயக்குனர் வாசு, பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாரியப்ப பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாணவன் தொடர்ச்சியாக ஒரு நிமிடத்தில் 132 முறை முழங்கால் சுழற்சி முறையில், சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தான். இந்த சாதனை நிகழ்ச்சியை, கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யும் அத்தாட்சி அலுவலர் ஜெட்லி நடுவராக இருந்து பதிவு செய்தார். ஏற்பாடுகளை, ஏகலைவா கலைக்கூட நிர்வாகிகள் செய்திருந்தனர். சாதனை படைத்த தேவ சிவபாலனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post நாமக்கல்லில் கின்னஸ் சாதனை முயற்சி; ஒரு நிமிடத்தில் 132 முறை சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவன்: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Devasivapalan ,Rajkumar ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளை 11ம்தேதி மூட உத்தரவு