×

எரிவாயு நுகர்வோர்கள் மாதாந்திர கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரியில் நாளை (27ம் தேதி) எரிவாயு நுகர்வோர்கள், முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும், எரிவாயு நுகர்வோர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நாளை (27ம் தேதி) மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கெகள்ள உள்ளதால், நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post எரிவாயு நுகர்வோர்கள் மாதாந்திர கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,District Collector ,Sarayu ,Krishnagiri District Food Supply and Consumer Affairs… ,Dinakaran ,
× RELATED கலெக்டராக தினேஷ்குமார் நியமனம்