×

அரசு நிலத்தில் மண் அள்ளிய பொக்லைன் பறிமுதல்

தர்மபுரி, ஜன.26: ஒகேனக்கல் அடுத்த கூத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவேரி ரோட்டில் உள்ள கெண்டிகான் குட்டை அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதனை ஒகேனக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு நிலத்தில் மண் அள்ளிய பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pokline ,Dharmapuri ,Koothappadi ,Village Administrative Officer ,Senthilkumar ,Kendigaon Kuttai government ,Cauvery Road ,Dinakaran ,
× RELATED தோரணவாயிலை இடித்தபோது பொக்லைன் ஆபரேட்டர் சாவு