- கிராமம்
- உயர்நீதிமன்றத்தில்
- மதுரை
- குருநாதன்
- திருச்சி
- துறையூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிராம
- சபா
- தின மலர்
மதுரை: திருச்சி துறையூரைச் சேர்ந்த குருநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகள் சார்பில் நடத்தப்படும் கிராமசபை கூட்டங்கள் குறித்து 7 நாட்களுக்கு முன்னதாக, நாள், இடம் பற்றி அந்தந்த கிராம ஊராட்சிகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும். கூட்டம் நடைபெறும்போது, கிராம மக்கள் தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஏற்க வேண்டும். இந்த பணிகளை அந்த பகுதியில் உள்ள தாசில்தார்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கடந்த 2018ல் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டீக்காராமன், விக்டோரியா கவுரி ஆகியோர், கிராம சபை கூட்டம் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா?, இவற்றை தாசில்தார்கள் ஆய்வு செய்கிறார்களா என்பது தொடர்பாக அரசிடம் இருந்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post கிராம சபை கூட்டங்கள் விதிகளின்படி நடக்கிறதா? விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.