×

பாஜவில் இரண்டாவதாக 16 மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு: தேர்தல் அதிகாரியும், துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி வெளியிட்டார்

சென்னை: பாஜவின் இரண்டாவதாக 16 மாவட்ட தலைவர்கள் பட்டியலை மாநில தேர்தல் அதிகாரி, துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி நேற்று வெளியிட்டுள்ளார்.பாஜவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் உட்கட்சித் தேர்தல் நடந்தது.

அதில் கிளைத்தலைவர், மண்டல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டன. பாஜவில் உள்ள 67 மாவட்ட தலைவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 33 மாவட்ட தலைவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 2வதாக நேற்று 16 மாவட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். பாஜக மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி நேற்று வெளியிட்டார்.

அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கே.சி.எம்.பி.சீனிவாசன், திருப்பூர் தெற்கு டாக்டர் மோகனபிரியா, ஈரோடு வடக்கு எஸ்.எம்.செந்தில்குமார், ஈரோடு தெற்கு எஸ்.எம்.செந்தில், கிருஷ்ணகிரி மேற்கு நாராயணன், கரூர் வி.வி.செந்தில்நாதன், தர்மபுரி சரவணன், திண்டுக்கல் மேற்கு ஜெயராமன், ராணிப்பேட்டை ஆனந்தன், புதுக்கோட்டை மேற்கு ராமச்சந்திரன், சேலம் மேற்கு ஹரிராமன், சேலம் கிழக்கு சண்முகநாதன், நாகப்பட்டினம் விஜயேந்திரன், பெரம்பலூர் முத்தமிழ் செல்வன், விருதுநகர் மேற்கு சரவண துரை (எ) ராஜா, திருவண்ணாமலை வடக்கு கவிதா ஆகியோர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post பாஜவில் இரண்டாவதாக 16 மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு: தேர்தல் அதிகாரியும், துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Election Officer ,Vice President M. Chakravarthy ,Chennai ,State Election Officer ,Vice President ,M. Chakravarthy ,Dinakaran ,
× RELATED சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு...