- செல்வப்பெருந்தகை
- அண்ணாமலை
- நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- க.செல்வப்பெருந்தகை
- சத்தியமூர்த்தி பவன்
- இலங்கை
- பிரதமர்…
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, கச்சதீவு விவகாரத்தில் 1974 மற்றும் 1976ல் நடந்த கச்சதீவு ஒப்பந்தம் தொடர்பான குறும்படத்தை வெளியிடப்பட்டார். அப்போது, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகப்பெரிய ராஜதந்திரத்துடன் செயல்பட்டார் என்பது வரலாறு.
ஆனால், அந்த வரலாற்றை அறியாமல், வரலாற்றை படிக்காமல் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்’’ என்றார். இதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அரசமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் அஜய்சிங் யாதவ், தமிழக மேலிட பொறுப்பாளர் மோகன் நாயுடு, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வழக்கறிஞர் முத்தழகன், ஓபிசி பிரிவு துணை தலைவர் எஸ்.தீனா, கலைப் பிரிவு நிர்வாகி சூளை ராஜேந்திரன், எஸ்சி துறை மாநில பொதுச் செயலாளர் மா.வே.மலையராஜா மற்றும் துறைமுகம் ரவிராஜ், ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post செல்வப்பெருந்தகை பேட்டி கச்சத்தீவு குறித்து புரிதல் இன்றி அண்ணாமலை பேசுகிறார் appeared first on Dinakaran.