சென்னை: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 23 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட மாநில காவல் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும். இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தவிருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 23 காவலர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.வீர, தீர செயலுக்கான விருது ஜஜி துரைக்குமார் மற்றும் ராதிகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவலர்கள் விருது பெறுவோர் விவரம்: காவல் கண்காணிப்பாளர் ஹெச். ஜெயலக்ஷ்மி, காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். தினகரன், துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். மதியழகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி. பிரபாகரன், துணை காவல் ஆணையர் ஏ. வீரபாண்டி, துணை காவல் கண்காணிப்பாளர் எம். பாபு, துணை காவல் கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன்,
துணை காவல் ஆணையர் டி.ஹெச். கணேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் ஜெ. ஜெடிடியா, காவல் கண்காணிப்பாளர் ஜெ.பி. பிரபாகர், காவல் உதவி ஆணையர் ஜெ. பிரதாப் பிரேம்குமார், காவல் உதவி ஆணையர் என். தென்னரசு, துணை காவல் கண்காணிப்பாளர் கே. வேலு, காவல் ஆய்வாளர் எஸ். அகிலா , காவல் ஆய்வாளர் எம். குமார், டெபுடி கமான்டன்ட் எஸ். அசோகன், அசிஸ்டன்ட் கமான்டன்ட் வி. சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் எம். விஜயலக்ஷமி, துணை ஆய்வாளர் எம்.சி.சிவக்குமார், துணை ஆய்வாளர் ஆர். குமார், காவல் துறைத்தலைவர் ஏ.டி. துரைக்குமார், காவல் துறைத்தலைவர் ஏ. ராதிகா.
The post தமிழ்நாட்டை சேர்ந்த 23 காவலர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிப்பு appeared first on Dinakaran.