×

இந்தியா-இந்தோனேசியா இடையே கடல்சார் பாதுகாப்பு, வர்த்தக உறவை வலுப்படுத்த ஒப்புதல்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியந்தா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள அவரை பிரதமர் மோடி நேற்று வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்டுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ‘‘அதிபர் சுபியந்தாவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது இந்தியாவும் இந்தோனேசியாவும் பல்வேறு பலதரப்பு தளங்களிலும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்றார்.

The post இந்தியா-இந்தோனேசியா இடையே கடல்சார் பாதுகாப்பு, வர்த்தக உறவை வலுப்படுத்த ஒப்புதல்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,NEW DELHI ,President ,Prabowo Subianta ,India ,Modi ,Republic Day ,Dinakaran ,
× RELATED மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி என...