×

தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

டெல்லி: சிறப்பான செயல்பாட்டுக்காக 12 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்தது டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவர் நீர்ஜா பட்லா, இமாச்சலத்தை சேர்ந்த விவசாயி ஹரிமன் ஷர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக பணிகளுக்காக பீகாரை சேர்ந்த பீம் சிங், பிரேசிலை சேர்ந்த ஜோனஸ் மசெட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிமை சேர்ந்த நரேன் குரங், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஜக்தீஷ் ஜோஷிலாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஷெய்கா அல் சபாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பறை இசை கலைஞர் வேலு ஆசான் மதுரையை சேர்ந்தவர் ஆவார். புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் பி.தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Velu ,Tamil Nadu ,Delhi ,Union Government ,Neerja Patla ,Hariman Sharma ,Himachal Pradesh ,Bhim ,Bihar ,Velu Aasan ,
× RELATED தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக்...