×

தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளில் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் :அசன் முகமது ஜின்னா கடிதம்

சென்னை : தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளில் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ” ஒரே நபர் பல குற்ற வழக்குகளில் ஈடுபடும்போது அந்த வழக்குகளில்
சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் புலன் விசாரணை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணையை கண்காணித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்.வழக்குகளில் ஜாமீன் பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவோரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்டுகளை அமல்படுத்த உரிய தடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளில் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளில் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் :அசன் முகமது ஜின்னா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Asan Mohammed Jinnah ,Chennai ,Tamil Nadu ,T.D. ,G. ,Chief Criminal Prosecutor ,Assan Mohammed Jinnah ,
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரின்...