×

குடியரசு நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அரசின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு!!

சென்னை: குடியரசு நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு மற்றும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது ஆளுநர் மாளிகையில், அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி, ஜனவரி 26ம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுங்கட்சி உள்பட அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கவிருக்கிறார். அதற்கான அழைப்புகளும் விடுக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துவிட்டன. ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.

அதே போல, மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக அங்கு நடைபெற உள்ள நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பங்கேற்கிறார். இதன் காரணமாக தேநீர் விருந்தில் முதல்வரும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தற்போது, ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதைக் கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுவதாகவும் குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் கூடிய சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post குடியரசு நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அரசின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Republic ,Governor of ,Tamil ,Nadu ,R. N. ,Ravi ,Chennai ,Republic Day ,Tamil Nadu ,Governor R. N. ,Tamil Nadu government ,Governor's House ,Independence Day ,Governor ,Ravi's tea party ,
× RELATED டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு பாராட்டு