×

பெண்ணை தாக்கியவர் கைது

 

திருப்பூர், ஜன.25:திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவருடைய மனைவி பாண்டீஸ்வரி (33). இவர் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (41) என்பவர் மூலமாக குழுவில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

சம்பவத்தன்று பாண்டீஸ்வரி வீட்டிற்கு சென்ற பால்பாண்டி, குழுக்கடன் தொகையை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பால்பாண்டி பாண்டீஸ்வரியை தகாத வார்த்தையால் பேசியதுடன், அவரை தாக்கி உள்ளார். இதுகுறித்து பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

The post பெண்ணை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Ranjith Kumar ,Guruvayurappannagar ,Boyampalayam ,Pandeeswari ,Palpandi ,
× RELATED தொழில் நிறுவனங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளார்களா?