×

பாடாலூரில் பயிற்சி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

பாடாலூர், ஜன.25: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 50க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

போக்சோ சட்டம், குழந்தை திருமணம், பாலியல் சம்பந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள், போதைப்பொருள் ஒழிப்பு, போதைப்பொருளுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை குறித்து விளக்கினார். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் ராமராஜன், முதுகலை விரிவுரையாளர் ஸ்ரீரங்கன் ஆகியோரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post பாடாலூரில் பயிற்சி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Badalur ,Perambalur District ,SP ,Adarsh Passera ,District Prohibition Enforcement Division ,Additional Superintendent ,Police Balamurugan ,Teacher Training Institute ,Alathur taluka… ,Dinakaran ,
× RELATED பாடாலூர் காவல் நிலையத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி ஏற்பு