×

பெரியார், பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்: பழ.நெடுமாறன் கண்டனம்

சென்னை: உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரை நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களை சேர்த்து, ஆயுதப்பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்து கொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பெரியார், பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்: பழ.நெடுமாறன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Pariyar ,Prabhakar ,Chennai ,President ,World Tamil Federation Pha ,Netudmaran ,Tamils ,Peryara ,Prabhakaran ,Peryaar ,Nedumaran ,Dinakaran ,
× RELATED கடைசி படத்தில் ஹீரோவாக நடித்த டேனியல் பாலாஜி