×

சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 6 ஆண்டு சிறை

திருச்செங்கோடு, ஜன.25: திருச்செங்கோடு கூட்டப்பள்ளி மற்றும் நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு தொடர் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், தொடர்புடைய வெள்ளாளப்பட்டி கீழேரிபட்டியைச் சேர்ந்த பிரபு(35) மற்றும் சட்டையம்புதூரைச் சேர்ந்த முருகேசன்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர் கள் மீதான வழக்கு விசாரணை திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. நேற்று இந்த வழக்கில் குற்றவியல் நீதிபதி சுரேஷ்பாபு தீர்ப்பளித்தார். சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஒவ்வொரு வழக்கிலும் தலா 3 ஆண்டுகள் வீதம் மொத்தம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 6 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Thiruchengode Kootapalli ,Weavers Colony ,Prabhu ,Vellalapatti ,Thilaripatti ,Murugesan ,Satyambudur ,
× RELATED வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம்