×

சுமை தூக்கும் பணியாளர்கள் மனு அங்கீகாரம் வழங்க கோரி

திருவண்ணாமலை, ஜன. 25:
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சுமை தூக்கும் பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, ‘சேத்துப்பட்டு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் நாங்கள் 80 பேர் 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக பணிபுரிந்தும் எங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. அங்கீகாரம் பெற்ற 20 நபர்கள் வயது மூப்பு காரணமாக அவர்கள் வாரிசுகள் மட்டுமே வேலையில் ஈடுபடுத்துகின்றனர். அதனால் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், தங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரிடம் பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். இதனால் வரை அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே சுமை தூக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அங்கீகாரம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post சுமை தூக்கும் பணியாளர்கள் மனு அங்கீகாரம் வழங்க கோரி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Chettupattu ,Tiruvannamalai Collector ,Dinakaran ,
× RELATED சேத்துப்பட்டு சிறப்பு எஸ்ஐ மீது...