×

பைக் மீது கார் மோதி 2 மேஸ்திரிகள் பலி பள்ளிகொண்டா அருகே பரிதாபம்

பள்ளிகொண்டா, ஜன.25: பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது பைக் மீது கார் மோதியதில் 2 மேஸ்திரிகள் பரிதாபமாக பலியாகினர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, அனங்காநெல்லூர் சிங்கல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(54). அதேபோல், வேலூர் துத்திப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுரங்கம்(57). இருவரும் கட்டிட மேஸ்திரிகள். நேற்று முன்தினம் காலை சேகர், பொன்னுரங்கம் ஆகிய இருவரும் பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, மதியம் வேலை முடிந்து இருவரும் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது பைக் மீது மோதியது.

இதில், சேகர், பொன்னுரங்கம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த மக்கள், இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னுரங்கம் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவிலும், சேகர் நேற்று அதிகாலை 2 மணியளவிலும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சேகர் மனைவி அளித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிந்து, திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை சேர்ந்த கார் டிரைவர் உதயகுமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 2 மேஸ்திரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பைக் மீது கார் மோதி 2 மேஸ்திரிகள் பலி பள்ளிகொண்டா அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : SKOLIGONDA ,Scollegonda ,Scoligonda ,Sekhar ,Singalapadi ,Vellore district ,taluka ,ananganelllur ,Vellore ,Ambedkar ,Bike ,Dinakaran ,
× RELATED டயர் வெடித்து வேன் கவிழ்ந்து சாலையில்...