×

சீறிப்பாய்ந்து இலக்கை எட்டிய காளைகள் கம்மவான்பேட்டையில் மாடு விடும் திருவிழா

கண்ணமங்கலம், ஜன. 25: வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் காளைவிடும் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை கிராம தேவதை திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, ஊராட்சி தலைவர் கவிதா முருகன், பெரியதனங்கள் தலைமையில் இளைஞர்கள் பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க பரிசு பொருட்களை ஊர்வலமாக எடுத்து வாடிவாசலை வந்தடைந்தனர். பின்னர் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான காளைகள் வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக ரசிகர்களிடையே சீறிப்பாய்ந்தன. முடிவில் குறிப்பிட்ட தூரத்தை அதிவேகமாக கடந்த காளைகளுக்கு முதல் மூன்று பரிசுகளாக ₹75 ஆயிரம், ₹50 ஆயிரம், ₹40 ஆயிரம் உள்ளிட்ட 51 பரிசுகள் வழங்கப்பட்டது.

The post சீறிப்பாய்ந்து இலக்கை எட்டிய காளைகள் கம்மவான்பேட்டையில் மாடு விடும் திருவிழா appeared first on Dinakaran.

Tags : festival of cow sacrifice ,Kammavanpettai ,Kannamangalam ,Vellore district ,Draupadiyamman ,Councilor ,Jayalakshmi Ezhumalai ,Panchayat ,President ,Kavita Murugan ,
× RELATED பெண்ணை வெட்டி கொன்றவர் கைது ஆடு விற்பனை தகராறு