×

108 ஆம்புலன்ஸ் மூலம் 1.62 லட்சம் பேர் உயிர் பிழைத்தனர் அதிகாரிகள் தகவல் 4 மாவட்டங்களில் 2024ல்

வேலூர், ஜன.25: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை 1.62 லட்சம் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதில் வேலூர் மாவட்டத்தில் காப்பாற்றப்பட்டவர்கள் 36 ஆயிரத்து 533 பேர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் காப்பாற்றப்பட்டவர்கள் 24 ஆயிரத்து 878 பேர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காப்பாற்றப்பட்டவர்கள் 31 ஆயிரத்து 647 பேர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 69 ஆயிரத்து 177 பேர் அடங்குவர். இது கடந்த ஆண்டை விட 4 ஆயிரத்து 253 பேர் அதிகம் என்று 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 108 ஆம்புலன்ஸ் மூலம் 1.62 லட்சம் பேர் உயிர் பிழைத்தனர் அதிகாரிகள் தகவல் 4 மாவட்டங்களில் 2024ல் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tiruvannamalai ,Tirupattur ,Ranipet ,Vellore district ,Ranipet… ,
× RELATED வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில்...