×

ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம், ஜன.25: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற குடியரசு தினமான 26ம்தேதியான நாளை காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த, கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், தர பொருட்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும், கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு-செலவு கணக்கு வைக்கப்பட வேண்டும் மாவட்ட கலெக்டர்கள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

The post ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Kanchipuram ,Gram ,Sabha ,Chengalpattu ,Republic Day ,Dinakaran ,
× RELATED ஊஞ்சாம்பட்டி ஊராட்சி வார்டுகளை தேனி...