- Poonamalli
- பொன்னேரி, பூந்தமல்லி
- பிரகாஷ்
- பெருமாள் கோயில் தெரு, செட்டிப்பேடு, நாசரேத்பேட்டை
- அப்பு (எ) மோகன பிரசாத்
பூந்தமல்லி, ஜன.25: பூந்தமல்லி, பொன்னேரியில் நடந்த சாலை விபத்துகளில் பாலிடெக்னிக் மாணவன், பட்டதாரி இளம்பெண் பரிதாபமாக பலியாகினர். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, செட்டிப்பேடு, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் அப்பு (எ) மோகன பிரசாத் (19), அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் இவரது நண்பர் கிருஷ்ணசாமி (19) என்பவருடன் பைக்கில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். பைக்கை அப்பு (எ) மோகன பிரசாத் ஓட்டினார். பின்னால் கிருஷ்ணசாமி அமர்ந்து இருந்தார்.
பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது பைக் மோதியதில் அப்பு கீழே விழுந்தார். இதில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் கிருஷ்ணசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர. தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷிதா (24), பி.டெக் பட்டதாரி. இவர் இரு சக்கர வாகனத்தில் நேற்று வீடு சென்று கொண்டிருந்தார். பொன்னேரி காவல் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் ரோஷிதா தவறி கீழே விழுந்து தலைநசுங்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோஷிதா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மணி என்பவரை கைது கைது செய்தனர். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post சாலை விபத்துகளில் மாணவன், இளம்பெண் பலி appeared first on Dinakaran.