களக்காடு,ஜன.25: பிரசித்தி பெற்ற அழகிய நம்பிராயர் கோயிலில் தெப்ப உற்சவம் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் 57வது ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் காட்சி அளிப்பது சிறப்புமிக்கது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை மிக்க இக்கோயிலில் ஆண்டு தோறும் தெப்ப உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 28வது திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 12ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளான்று இரவில் அழகியநம்பிராயர் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். 2ம் நாளான 13ம் தேதி திருமலைநம்பி தெப்பத்தில் உலா வருகிறார். ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர் மடத்தின் பவர் ஏஜண்ட் பரமசிவன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
The post திருக்குறுங்குடியில் பிரசித்தி பெற்ற அழகியநம்பிராயர் கோயிலில் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.