×

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய ஆத்தூர் போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

தூத்துக்குடி, ஜன. 25: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய ஆத்தூர் போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார். முக்காணி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தனது உயிரை பணயம் வைத்து போலீசார் முனியசாமி மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் கயிறு கட்டி பத்திரமாக மீட்டுள்ளார். போலீசாரின் இந்நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார். மேலும் போலீசாரின் வீரதீரச் செயலை பாராட்டும் விதமாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால், இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் முனியசாமி, விக்னேஷ் ஆகியோரை சென்னை காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

The post ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய ஆத்தூர் போலீசாருக்கு டிஜிபி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DGP ,Athur ,Thoothukudi ,Shankar Jiwal ,Inspector ,Mariyappan ,Mukkani Thamirabarani ,
× RELATED ஆத்தூரில் மாஜி விஏஓ தூக்கிட்டு சாவு