×

சாத்தான்குளத்தில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

சாத்தான்குளம், ஜன. 25: சாத்தான்குளம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சாத்தான்குளம் தாலுகாவில் தங்கியிருந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து சாத்தான்குளம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, சாத்தான்குளம் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post சாத்தான்குளத்தில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Satankulam Government ,the District Collector ,Satankulam Taluga ,Tuthukkudi District ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் அருகே முதியவரிடம் பைக்,...