×

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

திருப்புத்தூர், ஜன. 25: திருப்புத்தூர் பிரபாகர் காலனியில் உள்ள டி.இ.எல்.சி மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு பயன்பாட்டு உபகரணங்கள் நேற்று தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. அறக்கட்டளைத் தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். பள்ளி தாளார் சத்தியதாஸ், இசை ஆசிரியர் வைகை பிரபா, மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . தலைமை ஆசிரியை ஜெசிலீலா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிகரம் கனகராஜ், வேலுச்சாமி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஆசிரியர் அருண்சுகந்த் நன்றி கூறினார். அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கபட்டது.

The post மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,DELC School ,Prabhakar Colony, Tirupathur ,Trust Chairman ,Alagarsamy ,Sathiyadas ,Vaigai Prabha ,Dinakaran ,
× RELATED மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்