- அரசு கல்லூரி
- திருவாடானை
- திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- மாவட்டம்
- டாக்டர்
- வைதேகி
- பழனியப்பன்
- தின மலர்
திருவாடானை, ஜன. 25: திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான மருத்துவ முகாம் வட்டார மருத்துவர் வைதேகி தலைமையில் கல்லூரி முதல்வர் பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்றது. வளர் இளம் பருவத்தினருக்கான இந்த முகாமில் இளம் பருவத்தில் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோனைகளை வழங்கினர். மேலும், மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமில் தோல் பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. பல் மருத்துவர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவப்பு நாடா ஒருங்கிணைப்பாளர் கவுரவ விரிவுரையாளர் ராமமூர்த்தி செய்திருந்தார்.
The post அரசு கல்லூரியில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.