- திமுக
- முகவர்கள்
- திருவாடானை
- திமுக மத்திய ஒன்றியம்
- பூத் குழு
- திருவாடானை மத்திய ஒன்றியம்
- சரவணன்
- திருவாடானை சட்டமன்றத் தொகுதி
- தின மலர்
திருவாடானை, ஜன. 25: திருவாடானையில் தனியார் மஹாலில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.திருவாடானை மத்திய ஒன்றியச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளருமான அருண் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து மனோகரன், நகரச் செயலாளர் பாலா, மாவட்ட பிரதிநிதி சுரேந்திரன், தொண்டரணி அமைப்பாளர் மோகன், கிளைச் செயலாளர் ராமு, திருவாடானை மற்றும் கல்லூர் ஊராட்சிகளை சேர்ந்த பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
The post திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.