காரைக்குடி, ஜன. 25: காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் டி.வி பார்ப்பதற்காக தனது தாத்தா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசித்த பீகாரை சேத்ந்த முகமது ஆஷாத் அன்சாரி (28) என்பவர் சிறுமியுடன் பேசி பழகி உள்ளார். மேலும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அச்சிறுமி கர்ப்பமாகி சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் காரைக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது ஆஷாத் அன்சாரியை கைது செய்தனர்.
The post சிறுமி கர்ப்பம் பீகார் வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.