×

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு நெருக்கமான எம்பி திடீர் ராஜினாமா

அமராவதி: ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு நெருக்கமான மாநிலங்களவை எம்பி விஜயசாய் ரெட்டி தனது எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபுநாயுடு தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு, முன்னாள் முதல்வர் ஜெகன் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள், எம்பிக்கள் பதவி விலகி வருகிறார்கள். நேற்று ஜெகனுக்கு மிகவும் ெநருக்கமானவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வி.விஜயசாய் ரெட்டி தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பதிவில்,’ நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று(25ம் தேதி) ராஜினாமா செய்கிறேன். எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன். பதவி, சலுகைகள், பணத்திற்காக எதையும் எதிர்பார்த்து ராஜினாமா செய்யவில்லை. இந்த முடிவு முற்றிலும் எனது தனிப்பட்ட முடிவு. யாரும் என்னை ராஜினாமா செய்யும்படி கூறவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

The post ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு நெருக்கமான எம்பி திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Andhra ,Pradesh ,Chief Minister Jagan ,Rajya Sabha ,Vijayasai Reddy ,Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Jagan ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் வரும் 29ம்...