ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்க மாணவர்களுக்கு நிர்ப்பந்தம்: ஜம்மு காஷ்மீர் அரசு மீது பிடிபி சாடல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் சின் அகில பாரத வித்யார்த்தி பரிசத் சார்பில் நடந்த மூவர்ண கொடி பேரணியில் கலந்து கொள்வதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தியதற்கு மக்கள் ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் லிடிஜா முப்தி எக்ஸ் பதிவில், ‘‘ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு தலைமையிலான அரசின் கீழ் ஜம்மு காஷ்மீர் கல்வித் துறை, பூஞ்ச் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் சார்ந்த அகில பாரத வித்யார்த்தி பரிசத் சார்பில் நடந்த மூவர்ண கொடி பேரணியில் பங்கேற்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது இஸ்லாமிய எதிர்ப்பு மதவெறியை இயல்பாக்குகிறது. மாணவர்களை சித்தாந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கட்டாயப்படுத்துவதன் மூலம் கல்வியை ஒரு பிரசார கருவியாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது’’ என்று தெரிவித்துள்ளார்.

The post ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்க மாணவர்களுக்கு நிர்ப்பந்தம்: ஜம்மு காஷ்மீர் அரசு மீது பிடிபி சாடல் appeared first on Dinakaran.

Related Stories: