கார்கோன்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள புண்ணிய நகரங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கூறுகையில்,‘‘மாநிலத்தில் மது விலக்கு கொண்டு வருவதன் ஒரு பகுதியாக 17 புண்ணிய நகரங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும். உஜ்ஜையினி மாநகராட்சி பகுதி முழுவதும் மது கடைகள் மூடப்படும். நர்மதை ஆற்றின் கரையில் இருந்து 5 கிமீ சுற்றளவுக்கு மது விற்க தடை நீடிக்கும்’’ என்றார்.
The post 17 கோயில் நகரங்களில் மது விலக்கு அமல்: மபி முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.