×

பிப்.1ல் பட்ஜெட் தாக்கல் அல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட் பிப்.1ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை முன்னிட்டு நேற்று பாரம்பரிய முறைப்படி அல்வா கிண்டும் பணியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டார்.

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாரம்பரிய முறைப்படி இனிப்பாக அல்வா தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். இதில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதிச் செயலர் துஹின் காந்தா பாண்டே உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர்.

The post பிப்.1ல் பட்ஜெட் தாக்கல் அல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,New Delhi ,Union ,Parliament ,Finance Minister ,Dinakaran ,
× RELATED நிர்மலா தந்த காலி சொம்பு