3வது நாளாக நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே எரவாஞ்சேரி, சீயாத்தமங்கை, பட்டமங்கலம், தேவூர் ஆகிய 4இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது நெல்லின் ஈரப்பதத்தை அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்ததோடு, நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்தனர். பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்டம் சென்ற ஒன்றிய குழுவினர், காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம், ராஜேந்திரசோழகன், குப்பங்குழி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், கொள்முதலுக்காக கொண்டு வரப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர்.
The post நெல் ஈரப்பதம்: 3வது நாளாக ஒன்றிய குழு ஆய்வு appeared first on Dinakaran.