இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிறப்பு விசாரணைக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளில் ஒருவரான இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் மத்திய பணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பிரதான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால் மற்றும் சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த இரண்டு எப்.ஐ.ஆர் தொடர்பாக விசாரிப்பதற்கு வேறு குழுவை நியமிக்க வேண்டும். சிறுமியின் வாக்குமூலம் வெளியான விவகாரம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சைபர் கிரைம் பிரிவு அதிகாரியை நியமிக்கலாம் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு எப்.ஐ.ஆர் தொடர்பாக சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பக்கெர்லா சிபஸ் கல்யாண் தலைமையில் சைபர் கிரைம் ஆய்வாளர்கள் சாந்தி தேவி மற்றும் பிரவின் குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
The post அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வாக்குமூலம் வெளியானதை விசாரிக்கும் விசாரணை குழு மாற்றியமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.