×

ஐஐடி இயக்குனருக்கு பாஜ தலைவர்களுக்கு தபாலில் கோமியம்

கோவை: சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்று பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இதனை ஆதரித்து பேசிய பாஜவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ விற்கும் கோமியம் அனுப்பும் போராட்டத்தை திராவிடத் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று நடத்தினர். அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள அக்கட்சியினர் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதித்தமிழன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு கோமியத்தை அனுப்ப வந்தனர். ஊழியர்கள் மறுத்த நிலையில், அதிகாரியின் அறிவுரையின் பேரில் கூடுதல் பாதுகாப்புடன் பேக்கிங் செய்யப்பட்டு கோமியம் அனுப்பி வைக்கப்பட்டது.

The post ஐஐடி இயக்குனருக்கு பாஜ தலைவர்களுக்கு தபாலில் கோமியம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,IIT Chennai ,Kamakoti ,BJP MLAs ,Tamilisai Soundararajan ,Vanathi Srinivasan ,Dravidians ,IIT ,
× RELATED தவெக அரசியல் இயக்கமாக பரிணாமம் அடைவது சந்தேகமே: வானதி சீனிவாசன்