- பிரபாகரன்
- சீமான்
- கோயம்புத்தூர்
- நாதம் தமிழர் கட்சி
- கோயம்புத்தூர் விமான நிலையம்
- விடுதலைப் புலிகள்…
- தின மலர்
கோவை: பிரபாகரனை நான் சந்திக்கவே இல்லை என்று தெரிவித்த சீமான், ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. லட்சிய உறவு மட்டுமே இருக்கிறது. லட்சிய உறவுக்கு போராடி செத்தவர்களும், நாங்களும்தான் அவருக்கு ரத்த உறவுகள். அவரது அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் சொல்லுவதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் பதில் சொல்வார்கள்.
பிரபாகரனை நான் எட்டு நிமிடம் சந்தித்ததாக ஒருவர் சொல்கிறார். ஒருவர் பத்து நிமிடம் என்று சொல்கிறார். ஒருவர் இந்த படம் பொய் என்கிறார். நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன். எதை நம்புகிறீர்கள்? பிரபாகரன் உடன் எடுத்த புகைப்படம் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் புகைப்படத்தில் இருப்பது நானே இல்லை என்கிறேன். நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இதன்பின், தனியார் தொலைக்காட்சிக்கு சீமான் தனி பேட்டியளித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பெரியார் மற்றும் பிரபாகரனின் அண்ணன் மகன் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு, சீமான் பதிலளித்தபோது ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினார். இதற்கு சென்னை, கோவை பத்திரிகையாளர் மன்றங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
The post பிரபாகரனை நான் சந்திக்கவே இல்லை: உண்மையை ஒப்புக்கொண்ட சீமான்; ஆபாச வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு appeared first on Dinakaran.