×

பெரியார் இல்லையென்றால் கோவணம் கட்டி ஏர் ஒட்டி கொண்டுதான் இருந்திருப்பேன்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர். இவ்விழாவில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நான் இங்கே துரைமுருகன் எம்.ஏ, பி.எல், ஒரு சட்டமன்ற உறுப்பினர், திமுகவின் பொருளாளர் இவ்வளவு அந்தஸ்துக்களையும் பல ஆண்டுகளாக நான்பெற்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் ஒரே ஒருவர் பெரியார். பெரியார் இல்லாவிட்டால் இன்னும் நான் கோவணம் கட்டி ஏர் ஒட்டிக்கொண்டு தான் இருந்திருப்பேன். பெரியார் மீது சேற்றை வாரி இறைத்தனர். இறைத்து கொண்டும் இருக்கிறார்கள்.பெரியாரிடம் போய் கேட்டார்கள் ‘ஏன் சிலர் இப்படி செய்கிறார்கள்’ என்று, ‘இன்னும் அவர்கள் பழைய ஆட்களாக இருக்கிறார்கள். இன்னும் திருந்தவில்லை. வருவார்கள்’ என்று சொல்லிவிட்டார். தமிழ் சமுதாயம் இந்தியாவிலேயே தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு காரணம் பெரியார்தான். அந்த பெரியாரை கூட எதிர்த்து பேசும் அளவுக்கு இழிநிலை பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள்.

The post பெரியார் இல்லையென்றால் கோவணம் கட்டி ஏர் ஒட்டி கொண்டுதான் இருந்திருப்பேன்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Minister ,Duraimurugan ,Chennai ,DMK ,Chief Minister ,M.K. Stalin ,Anna Arivalayam ,General Secretary ,MA ,PL ,MLA ,DMK… ,
× RELATED பிப்ரவரி 28ம் தேதி மக்கள்...