×

வேங்கைவயல் பிரச்னை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

The post வேங்கைவயல் பிரச்னை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CBI ,Vengai Vayal ,Marxist Party ,Chennai ,State Secretary of ,Shanmugam ,CBI CID ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு...