சென்னை: பாஜக மாநில தலைமையை கைப்பற்ற வானதி சீனிவாசன் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கட்சியின் விதிமுறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேபோல் ஒருவருக்கு 2 முறை மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில், 2021ம் ஆண்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை தமிழக பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. பாஜவின் உட்கட்சி தேர்தல் நடந்து பாஜ கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், 33 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மீதமுள்ள 34 மாவட்ட தலைவர்களும் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மாநில தலைமையை கைப்பற்ற வானதி சீனிவாசன் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழிசை மாநில தலைவர் பதவிக்கு காய் நகர்த்தியதாக செய்திகள் வெளியாயின. தற்போது வானதியும் பாஜக மாநில தலைவர் பதவிக்கு காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அமைச்சர் ஒருவர் மூலம் மாநில தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரம் என கூறப்படுகிறது.
மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியான போது அண்ணாமலை பெயரை தவிர்த்து வானதி பதிவிட்டார். டங்ஸ்டன் ரத்து விவகாரத்திலும் அண்ணாமலை பெயரை தவிர்த்து வானதி பதிவிட்டார். எக்ஸ் தள பதிவுகளில் மாநில தலைவர் பெயரை வானதி சீனிவாசன் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். பாஜக மாநில தலைவர் யார் என்ற முடிவை விரைவில் பாஜக தேசிய தலைமை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
The post பாஜக மாநில தலைமையை கைப்பற்ற வானதி சீனிவாசன் திட்டம்? appeared first on Dinakaran.