×

4 வயது சிறுமி பலாத்காரம் மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புத்தன்வேலிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). அந்த பகுதியின் மார்க்சிஸ்ட் செயலாளராக இருந்தார். அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 வயது சிறுமி விளையாட வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 12ம் தேதி தனது வீட்டுக்கு வந்த சிறுமியை சுப்பிரமணியன் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் செங்கமநாடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தகவல் அறிந்ததும் சுப்பிரமணியன் திடீரென தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையே சுப்பிரமணியன் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் சுப்ரமணியன் போலீசின் பிடியில் சிக்காமல் இருந்தார். அவரை சிபிஎம் காப்பாற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் சுப்ரமணியத்தை கைது செய்து விசாரித்தனர். தொடர்ந்து அவரை ஆலுவா சிறையில் போலீசார் அடைத்தனர்.

The post 4 வயது சிறுமி பலாத்காரம் மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Subramanian ,Buddanvelikkara ,Ernakulam, Kerala ,Marxist ,
× RELATED மைனா பட நடிகர் மரணம்